மஞ்சநாயக்கனஹள்ளி சிற்றோடை

அமைவிடம் - மஞ்சநாயக்கனஹள்ளி சிற்றோடை
ஊர் - மஞ்சநாயக்கனஹள்ளி
வட்டம் - பென்னாகரம்
மாவட்டம் - தருமபுரி
வகை - நெடுங்கல்
கிடைத்த தொல்பொருட்கள் - நெடுங்கல்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.2019
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

தமிழாசிரியர் முருகன், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை இணை  இயக்குநர் சுப்பிரமணியன்

விளக்கம் -

பென்னாகரம் அருகே, மஞ்சநாயக்கனஅள்ளியில், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 7 அடி உயர குத்துக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தர்மபுரி மாவட்டத்தில் கிடைத்துள்ள 2வது குத்துக்கல் ஆகும். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் மஞ்சநாயக்கனஅள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே சிற்றோடை ஒன்று செல்கிறது. இந்த ஓடையில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன.

ஒளிப்படம்எடுத்தவர் - தமிழாசிரியர் முருகன், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை இணை  இயக்குநர் சுப்பிரமணியன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

ஒரு குடியின் தலைவன் அல்லது அப்பகுதியில் இருந்த சிற்றரசனை அடக்கம் செய்த இடத்தில் ஒரு பெரிய உயரமான கல்லை நடுவார்கள். இத்தகைய நினைவுச் சின்னத்திற்கு குத்துக்கல் என்று பெயர். இத்தகையக் குத்துக்கல் ஒன்று இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 7 அடி உயரமுடையது. இக்கல்லை இப்பகுதி மக்கள் யானை கட்டும் கல் என்று கூறுகின்றனர். இங்கு ஒரு நகரம் இருந்ததாகவும், அந்த நகரத்தின் எல்லையில் யானையைக் கட்டி வைத்தாகவும் கூறுகின்றனர். இது இறந்தவர்களை வழிபடும் வழக்கத்தின் தொடக்க காலம். இந்த வழிபாடு பின்னர் வளர்ந்து நடுகல் வழிபாடாக மாறியது. தற்போது இதை வேடியப்பன், கோல்காரன், ஐயனாரப்பன், கிருஸ்னாரப்பன் போன்ற பெயர்களில் வழிபடுகின்றனர்.